140
இந்திய இராணுவத்தினர் மூவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் அக்னூர் என்ற பகுதி அருகே, இராணுவ முகாம் ஒன்றின் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிலர் காயமடைந்திருக்கலாம் என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு, இந்திய இராணுவ படைகள் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மைய காலமாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு முன்னரும் இந்தியப் படை உறுப்பினர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love