குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாமதிக்கப்படுவதற்கு தான் காரணமில்லை எனவும் எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 17ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேன்முறையீடுகள் குறித்த அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தாமதமின்றி நடாத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் எல்லை நிர்ணய அறிக்கையில் சுமார் 56 திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் எல்லை நிர்ணய அறிக்கையில் இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி கையொப்பமிடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்கள் கால தாமதம் அடைவதற்கு தம்மை குற்றம் சுமத்துவது குறைகூறுவது எவ்விதத்திலும் நியாயம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.