Home உலகம்எகிப்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் எட்டு பேர் பலி

எகிப்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் எட்டு பேர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எகிப்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்த பட்சம் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் வடக்கு நகரமான சிய்னாயில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஏழு பேர் காவல்துறையினர் எனவும் ஏனைய ஒருவர் பொதுமகன்  எனவும் தெரிவிக்கப்படுகிறது. ட்ரக் வண்டியொன்றில் வந்த தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

வெடிபொருட்கள் நிரப்பட்ட ட்ரக் வண்டியினை தற்கொலை குண்டுதாரி சோதனைச் சாவடி  நோக்கி செலுத்தியதாகவும், ஏனைய சிலரும் சோதனைச் சாவடி நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More