162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான முடிவு பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசி;ங்கவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் மீளவும் இந்த விடயம் தொடர்பில் பேசப்பட உள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Spread the love