குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை ஊடகப் பேச்சாளராக பிரியந்த ஜயகொடி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி காவல்துறை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் பதவிக்கான வெற்றிடத்தினால் மக்கள் மத்தியில் காவல்துறை செய்திகள் தொடர்பில் தப்பான அபிப்பிராயம் ஏற்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுடன் தொடர்பாடுதல் தொடர்பில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜயகொடி குற்றவியல் பதிவுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.