குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக தாம் செய்த பரிந்துரைகளே தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தாம் அந்தக் காலத்தில் பரிந்துரை செய்த அரசியல் சாசனத்தை தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்போது அதே விடயங்கள் உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனமொன்றையே பிரதமர் ரணில் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமது கட்சி மீளவும் வெற்றியீட்டும் என்ற காரணத்திற்காக அப்போது ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை எதிர்த்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடும் என்ற அச்சத்தினால் தமது யோசனையை ரணில் எதிர்த்தார் எனவும், பின்னர் அவர்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தாம் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் தமது யோசனைக்கு ஆதரவளித்திருந்தால் நல்லது என தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் கருதுகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.