152
வட மாகாணத்தின் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்கப்பட உள்ளதென வடமாகாண கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகள் மூடப்படும் எனவும் 12ம் திகதி பௌர்ணமி தினமாகவும் 14ம் திகதி தைப்பொங்கல் தினமாகவும் காணப்படுவதனால் 13ம் திகதியையும் விடுமுறை தினமாக அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை 13ம் திகதிக்கான பாடசாலை கற்கை நடவடிக்கைள் நடைபெறும் என வட மாகாண கல்விச் செயலாளர் ஈ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
Spread the love