ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தமையினால் தமிழகத்தில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற இந்த வழக்கு அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என உச்ச நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற உத்தரவு வரும் வரை அவசர சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் அனவைரதும் எதிர்பார்ப்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளது.