குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மீளவும் கிடைத்தமை முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாக மட்டும் கருதி விட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் செய்த அர்ப்பணிப்புக்களின் பயனாக இந்த வரிச்சலுகை மீளவும் கிடைக்கப் பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன் ஊடாக, ஆடைத் தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு உற்பத்திகளை, ஐரோப்பாவில் சந்தைப் படுத்த வாய்பு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகச்சிறந்த பிரதிபலனை வழங்கும் என்றும் பிரதமர் தமது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.