குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக ரத்து செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், மின் வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சரான அஜித் பி பெரேரா கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படாது என கூறி வருகின்ற போதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.