152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாகாணங்களின் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அமைச்சுக்கள் இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. இன்று விடுமுறை வழங்கப்படும் நிலையில், மேலதிக தினம் ஒன்றில் பாடசாலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமான பாடசாலைகளில் எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்பட உள்ளது.
Spread the love