இந்தியாவின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றும் உத்தரவை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபான கடைகள் விபத்துக்கு வழிவகுப்பதாக தெரிவித்து அண்மையில் இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபான கடைகளை வருகிற மார்ச் 31ம் திகதிக்குள் அகற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி மாகி மதுபான வியாபாரிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றில் ; ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணைக்கு வந்துள்ள போதே நீதிபதிகள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என்றும்இ அந்த உத்தரவை செயல்படுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.