2017ஆம் ஆண்டிற்கான தேசிய பொங்கல் விழா இன்று (15.01.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 12.00 மணிக்கு நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சும் மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலை இந்து கலாச்சார அமைச்சும், இனைந்து நடத்தும் இப்பொங்கள் விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனிதகாம்பரம், புனர்வாழ்வு சிறைச்சாலை இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவரும் தேசிய சகவாழ்வு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.