கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உமையாள்புரம் பாடசாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு யுனிசெப் திட்டத்தின் கீழ் பதினேழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கு என்பது அடி நீளமும் இருபது அடி அகலமும் கொண்ட அரை நிரந்தர கட்டடம் ஒன்று பாடசாலைக்கு வழங்கப்பட்டது
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2011 ஆம் ஆண்டு பாடசாலையில் இடம்பெற்ற போது அப்போதைய கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்த த.குருகுலராஜா (தற்போது வட மாகாண கல்வி அமைச்சா்) மற்றும் அப்போது கண்டாவளை பிரதேச செயலாளராக இருந்த எஸ். சத்தியசீலனும் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனா்.
இதன்போது த.குருகுலராஜா பாடசாலை அதிபர் செல்வவிநாயகம் அருளானந்தசிவத்திடம் இ்நத பிரதேசம் கடும் வெப்பம் கொண்ட பிரதேசம் என்பதனால், தகரம்,கொண்ட கூரையுடன் அமைக்கப்படவுள்ள வகுப்பறைக் கட்டடம் மாணவா்களுக்கு பொருத்தமானதாக இருக்காது எனவே ஒடு போட்ட கூரையுடன் நிரந்தர கட்டடமாக அமைக்குமாறும் அதற்கான நிதியை பெற்றுத் தருவதாகவும் கூறியிருந்தாா். இதன் போது அப்போது பிரதேச செயலாளராக இருந்த சத்தியசீலனும் உடனிருந்துள்ளாா்.
எனவே அவரின் வாய் மூலமான உறுதிமொழியிபடி பாடசாலை அதிபா் செ.அருளானந்தசிவம் நூறு அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட நிரந்தர பாடசாலை கட்டடம் ஒன்றை அமைத்து 2012 இல் த.குருகுலராஜாவை கொண்டு சம்பிரதாயபூா்வமாக திறப்பு விழாவும் செய்துள்ளாா்.
இதற்காக பாடசாலை அதிபா் தனது பெயரில் மக்கள் வங்கியில் ஐந்து இலட்சம் ரூபா கடனும், தன்னுடைய நகைள் உள்ளிட்ட சொந்தப் பணம் ஏழு இலட்சம் ரூபாவும், இரண்டு ஆசிரியைகளிடம் வட்டிக்கு தலா மூன்று இலட்சமும் ஏனைய வழிகளிலும் என மொத்தமாக பதினெட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை செலவு செய்து பாடசாலை கட்டடத்தை முழுமையாக கட்டி முடித்திருந்தாா்
திறப்பு விழாவின் போது இந்த விடயத்தை த.குருகுலராஜாவின் கவனத்திற்கும் அதிபா் கொண்டு வந்துள்ளாா். ஆனால் அவா் கல்விப் பணிப்பாளராக இருந்து ஒய்வுப்பெற்று இன்று வடமாகாண கல்வி அமைச்சராக வந்துவிட்டாா் இருந்தும் அவரின் வாக்குறுதிக்கு அமைவாக நிரந்தர கட்டடத்தை அமைத்த குறித்த அதிபரின் பதினெட்டு இலட்சத்து ஐம்தாயிரம் ரூபாவுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை கடமை நிறைவேற்று அதிபராக உமையாள்புரம பாடசாலையில் கடமையாற்றிய அதிபா் செ. அருளான்ந்தசிவம். தனது அதிபா் பதிவியையும் இழந்துள்ளாா். நெருக்கடியான காலத்தில் கடமை நிறைவேற்று அதிபராக பாடசாலைகளை பொறுப்பேற்று நடத்திய அவா் தற்போது அந்தப் பதிவியையும் இழந்து பரந்தன் ஆசிரியா் மத்திய நிலையத்தில் விரக்தியுடன் காணப்படுகின்றாா்.
பாடசாலை நிரந்த வகுப்பறைக் கட்டடத்திற்காக பெற்ற வங்கி கடன் சம்பளத்தில் கழிக்கப்படுவதோடு, இரண்டு ஆசிரியைகளிடம் பெற்ற கடனில் வட்டியுடன் ஒரு ஆசிரியைக்கு திருப்பி கொடுத்து விட்ட நிலையில் மற்றொரு ஆசிரியைக்கும் விரைவில் கொடுக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றாா்.
எனவே இது தொடா்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளா் க.முருகவேல் அவா்களை தொடா்பு கொண்டு வினவிய போது குறித்த சம்பவம் உண்மை என்றும் தற்போது தனது உறுதிப்படுத்தலுடன் மாகாண கல்வி அமைச்சருக்கும், அமைச்சின் செயலாளருக்கும் குறித்த அதிபரினால் கடிதங்கள் அனுப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தாா்.
தற்பொழுது அதிபா் செ. அருளானந்தசிவத்திற்கு தனது பதினெட்டு இலட்சத்து ஐம்தாயிரம் ரூபா பணமும் போய் அதிபா் பதவியும் போய் நிா்க்கதியில் நிற்கின்றாா். ஆனால் வாக்குறுதி அளித்தவா்கள் வாய் மூடி விற்கின்றனா் கடந்த ஐந்து வருடங்களாக