நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர்இ 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுவது பொருத்தமற்றதாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்து பாராளுமன்றை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அஜித் பெரேராஇ மக்களுக்கு மெய்யாகவே பொறுப்பு சொல்லக்கூடிய பாராளுமன்றம் ஒன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.