170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீமல் வீரவன்ச தலைமை தாங்கும் ஜே.என்.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
அரச வாகன துஸ்பிரயோகம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வீரகுமார திஸாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு நிதி குற்றவியல் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் கைதுகள் மூலம் கூட்டு எதிர்கட்சியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love