152
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுவீடனுக்கு பயணம் செய்ய உள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் சுவீடனுக்கான பயணத்தை வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொற் வோல்ஸ்றோம் ( Margot Wallström ) அழைப்பிற்கு அமைய இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பயணத்தின் மூலம் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love