இந்தியாவின் மேற்குவங்கப்பகுதியில் இடம்பெற்ற புனித நீராடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட அறுவர்; உயிரிழந்துள்ளதுடன் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குவங்க மாநிலத்தின் கங்காசாகர் அருகே உள்ள சாகர் தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் மகர சங்கராந்தி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கா சாகர் பகுதியில் புனித நீராடிய பின்னர் மாலை நேரம் அங்கிருந்து படகுகள் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்காக கொல்கத்தா செல்லும் படகில் ஏறுவதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்ததினாலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.