குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருந்து கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்குக்கு புறப்பட்டு சென்ற துருக்கில் எயர்லைன் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தரை இறங்க முற்பட்ட விமானம் கடுமையான பனி மூட்டம் காரணமாக தவறுதலாக மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்த விபத்தில் 4 விமானிகள் உட்பட 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அங்கு மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாகவும் கிர்கிஸ்தானின் அவசர சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment