146
ஈழக் கவிஞர் தீபச்செல்வன் பேரினவாதத் தீ என்ற புதிய நூலினை தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிட்டு வைத்தார். சென்னைப் புத்தக கண்காட்சியில் நேற்றைய தினம் இந்தப் புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நாஞ்சில் நாடன் வெளியிட கவிஞர் அகரமுதல்வன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். போருக்குப் பிந்தைய ஈழத்து மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் குறித்து விபரிக்கும் இந்தப் புத்தகம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஈழ மக்களின் வாழ்வுப் போராட்டம் குறித்தும் பேசுகின்றது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ் மக்கள் தேர்தலில் தோற்கடித்தமை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் குறித்தும் இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளது. தமிழகத்தின் யாவரும் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Attachments area
Spread the love