Home பிரதான செய்திகள் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி

by admin

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் ஆரம்ப சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனையான பெலின்டா பெனிக்கை எதிர்க்கொண்டார். இதில் செரீனா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனையான கரோலினா பிலிஸ்சோவா 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை   சாராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More