122
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லாட்சி கொள்கைகளிலிருந்து விலகியிருந்த சமூகமொன்றில் நல்லாட்சியை அமுல்படுத்துவது சிரமமானதே என குறிப்பிட்டுள்ள அவர் சிரமங்களுக்கு மத்தியிலும் முடிந்தளவு நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.
நல்லாட்சி குறித்த பௌத்த மத முன்னுதாரணங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love