குளோபல் தமிழ்ச் செய்திகள்
அவுஸ்திரேலிய அணியிற் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக மொன்டி பென்சார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதம் அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
34 வயதான இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளார் பென்சாரை அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக தெரிவு செய்துள்ளது.
2012-2013ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் அங்கம் வகித்த பென்சார் மொத்தமாக 17 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன் இந்தப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளீதரன் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.