குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை கனடா நாடு கடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளரான மாணிக்கவாசகம் சுரேஸ் என்பவர் கனேடிய நீதிமன்றில் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்த காலமாக தம்மை நாடு கடத்தக் கூடாது எனக் கோரி சுரேஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாணிக்கவாசகம் சுரேஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஓர் உறுப்பினர் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் புகலிடக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தன்னார்வ அடிப்படையில் புலிகளின் சார்பில் சுரேஸ் கடயைமாற்றியதாகவும் நிதி திரட்டியதாகவும் நீதவான் ரிச்சர்ட் மோஸ்லி குற்றம் சுமத்தியுள்ளார். 1990களில் சுரேஸை புலிகள் அனுப்பி வைத்தனர் எனவும், உலகத் தமிழர் இயக்கம் என்ற ஓர் அமைப்பின் சார்பில் இயங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1995ம் ஆண்டு சுரேஸை கனேடிய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். 2015ம் ஆண்டில் சுரேஸை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, இந்த தீர்ப்பிற்கு எதிராக மீளவும் சுரேஸ் மேன்முறையீடு செய்திருந்தார்.