வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கல்வி கற்றும் வரும் வெளிநாட்டு பௌத்த பிக்குகள் மற்றும் வேறும் பல்வேறு காரணிகளுக்காக இலங்கை வரும் வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பௌத்த சர்வதேசம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுத்ம், வீசா கட்டணங்களை வெகுவாக அதிகரித்தும், வேறும் காரணிகளினாலும் இவ்வாறு வெளிநாட்டு பௌத்த பிக்குகளை நாடு கடத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.