குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யும் கடப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உண்டு என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி கொண்டுள்ளார் எனவும், தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி எங்கும் கூறியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தெருக்கள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்த காரணத்தினால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் நீடித்து வருவதாகத் தெரிவிரத்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டுமென பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.