தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்புவதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து டெல்லி வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கோரரி நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போராட்டமானது சென்னை, மதுரை, சேலம் என அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உதவ இயலாது எனஎனத் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி; ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுனையாக இருக்கும் என இன்று காலையில் சந்தித்த தமிழக முதலிவரிடம் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் எனத் தெரிவித்ததனையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதுடன் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது