குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்றைய தினம் சரத் குமார குணரட்னவிற்கு பிணை வழங்கியுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றில் பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தியே, சரத் குமார குணரட்ன கைது செய்யப்பட்டிருந்தார். 25000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா பத்து லட்சம் ரூபா அடிப்படையிலான இரண்டு சரீரப் பிணையிலும் சரத் குமார குணரட்ன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.