156
உச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும் புதிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உச்சளவில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதிகாரம் அந்தப் பிரதேச மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹலிஎல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love