குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது கைகள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை குறித்து சுதந்திரமாக தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் மற்றும் இயங்கி வரும் மாபீயாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விமான சேவைகள் தொடர்பில் ஜே.சீ. வெலியமுனவின் அறிக்கையின் அடிப்படையில் ஸ்ரீலங்கள் விமான சேவை நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையில் மாபீயா இருப்பதாகவும் தற்போதும் அந்த நிலைமை நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெலியமுன அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் விமான சேவையை சிறந்த முறையில் மேற்கொள்ள முயற்சித்து வருவதாகவும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.