குளோபல் தமிழ்ச் செய்திகள்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை கிலோ ஒன்று 76 ரூபா என்ற விலையை விடவும் அதிக விலையில் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அரிசியை இறக்குமதி செய்யும்போது நுகர்வோருக்கு பொருத்தமான அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்க களஞ்சியசாலைகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதியினால் நெல் களஞ்சிய சபைக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைய 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை எதிர்வரும் சில வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்க இந்தோனேசிய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.