238
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க கோரி இந்திய பிரதமருக்கு , இந்திய துணை தூதுவர் ஊடாக மகஜர் அனுப்பி வைக்கபட்டு உள்ளது.
வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிங்கம் , அனந்தி சசிதரன் ஆகியோர் இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதரத்தில் துணை தூதுவர் ஏ.நடராஜனை சந்தித்து மகஜரை கையளித்து உள்ளனர்
மகஜரை பெற்றுக்கொண்ட துணை தூதுவர் மகஜரை பிரதமருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , ஜல்லிக்கட்டு விடயத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களின் உணர்வினை புரிந்து கொள்கிறேன் இலங்கை தமிழர்களின் உணர்வினை மதிக்கிறேன் என தெரிவித்தார்.
Spread the love