பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
எம்மை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் பெரும்பாலும் சிங்களவர்களாக உள்ள நிலையில், தமக்கு நீதியான தீர்ப்பு கிடைப்பதில்லை எனவும் எனவே தம்மை தமிழ் நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அல்லது தமிழ் நீதிபதிகள் உள்ள நீதிமன்றங்களுக்கு தமது வழக்குகளை மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.