154
குளோபல் தமிழ்ச் செய்திகள்
இலங்கையின்; சில பகுதிகளில் இன்றைய தினம் முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அதிகளவிலான மழைப்பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் இதன்போது இந்த பிரதேசங்களில் காற்று சற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவிய வரட்சியினை அடுத்து நாட்டின் சில பாகங்களில் தற்போது ஒரளவிலான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love