182
குளோபல் தமிழ்ச் செய்திகள்
அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் இதனைத் தெரிவித்துள்ளார். வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொண்டு ஆற்றிய முதல் உரையின் பின்னர் மோர்கல் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தாம் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love