குளோபல் தமிழ்ச் செய்திகள்
பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி ஏற்படுமா என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவின் ஆர்வா என்ற பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 167 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.9 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத போதும் இப்பகுதியில் கடல் அலைகளின் எழுச்சியானது இயல்பைவிட அதிகமாக காணப்படுவதால் சுனாமி தாக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது