Home இந்தியாஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பில் தமிழக அரசு உச்சநீதிமன்றில் கேவியட் மனு தாக்கல் :

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பில் தமிழக அரசு உச்சநீதிமன்றில் கேவியட் மனு தாக்கல் :

by admin

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பில் தமிழக அரசு உச்சநீதிமன்றில்  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதன்  காரணமாகவே தமிழக அரசு இந்த  கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான தடையை நீக்கி அதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுனர்  வித்யாசாகர் ராவ்  நேற்றையதினம்  பிறப்பித்துள்ள நிலையில்  ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக  உச்ச நீதிமன்றில்  தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More