குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டுமென ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டங்களின் அடிப்படையில் பத்து ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டவருக்கு எதிராக கூட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்ற போதிலும், கோடிக் கணக்கில் மோசடி செய்தவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதாக தெரிவித்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது யாருக்கு எதிராக வழக்குத் தொடர்வது யாருக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடாது என்று ஆய்வு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் மக்களின் பிரச்சினைகள் எதற்கும் அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.