குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன, ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை நிறுவத் தீர்மானித்துள்ளார். விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி அதன் ஊடாக விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளார். டுவிட்டர் கணக்கின் பதிவொன்றை இட்டு இது பற்றிய தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து இந்த வாரத்தில் ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்று நிறுவப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இந்த மோசடிகளுடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு எனவும் கோப் குழு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.