குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிழக்கு ஜெருசலத்தில் வீடுகளை அமைக்க இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். 566 வீடுகளை அமைப்பதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலஸ்தீனம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்களில் வீடுகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா பதவியிலிருந்து ஒய்வு பெறும் வரையில் இஸ்ரேலிய அதிகாரிகள் வீட்டு நிர்மானத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதனை ஒத்தி வைத்து வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. ஒபாமா காலத்தில் கைககள் கட்டப்பட்டிருந்ததாகவும் தற்பொழுது அவ்வாறான நிலைமை கிடையாது எனவும் ஜெருசலம் நகரின் பிரதி மேயர் meir turgeman தெரிவித்துள்ளார்.