குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நிதி அமைச்சில் கடமையாற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் நிதி அமைச்சில் ஆலோசகராக கடமையாற்றி வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அர்ஜூன் மகேந்திரன் மீளவும் நிதி அமைச்சில் கடமையாற்றுவதாகக் குற்றச்சாட்டு
Jan 23, 2017 @ 09:58
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீளவும் நிதி அமைச்சில் கடமையாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜூன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அர்ஜூன் மகேந்திரன் தற்போது நிதி அமைச்சில் கடமையாற்றி வருவதாக ஊழல் ஒழிப்பு முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
நிதி அமைச்சின் மத்திய வங்கியின் ஆலோசராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் கூட்டங்களிலும், நிதி அமைச்சின் ஆலோசகர் என்ற ரீதியிலும் அர்ஜூன் மகேந்திரன் பங்கேற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஊழல் ஒழிப்பு முன்னணி கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. ஊழல் ஒழிப்பு முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் மற்றும் அதன் ஆலோசகர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.