குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தை செய்ய விரும்பினால் அதற்கு ஆதரவு வழங்கத் தயார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடையக் கூடும் என்ற அச்சத்தினால் அரசாங்கம் தேர்தலை ஒராண்டுக்கு ஒத்தி வைக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் இது குறித்து தமக்கு கூறியதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்திற்கு மஹிந்தவின் நினைவு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகிக்கும் வரையில் அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆதரவளித்தால், உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றியீட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் தேசத்துரோக செயற்பாடுகள் குறித்து உண்மையிலேயே ஜனாதிபதி விரக்தியடைந்திருந்தால் எமக்கு புதிய கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.