குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரைகளுக்கு அமையவே அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தேச புதிய அரசியல் சாசனத்தில் நாட்டின் இறைமைக்கு மிகவும் பாதிப்பான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கெஹலிய குற்றம் சுமத்தியுள்ளார்.