குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டராம்பிற்கு எதிராக சட்டத்தரணிகள் சிலர் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர். வெள்ளை மாளிகையின் தொழில் கோட்பாடுகள் சட்டத்தரணியும் இந்த சட்டத்தரணிகள் குழுவில் இணைந்து கொண்டுள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ள தமது நிறுவனத்திற்கு ட்ராம்ப் அனுமதி வழங்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்கள் கொடுப்பனவுகளை வழங்க தமது நிறுவனத்திற்கு அனுமதித்தமை தொழில் ஒழுக்க கோட்பாடுகளுக்கு முரணானது எனவும் இந்த நடவடிக்கையானது அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து ட்ராம்பின் நிறுவனங்கள் பணம் பெற்றுக் கொள்வதனை நீதிமன்றம் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் ட்hம்ப்பின் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வர்த்தகர் என்ற வகையில் இந்த நாடுகளுடன் பேசுவது பொருத்தமற்றதாக அமையும் எனவும், ஜனாதிபதிக்கு உசிதமாகாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.