குளோபல் தமிழ்ச் செய்திகள்
மத்திய வங்கி மோசடிகள் குறித்து எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது எனவும் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றதனை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை அரசாங்கம் நியமித்தது எனவும் கடந்த காலங்களில் ஆளும் கட்சியின் உறுப்பினரே கோப் குழுவின் உறுப்பினராக கடமையாற்றியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.