170
பிரேசிலில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். தகவல் அறிந்ததும் ராணுவம் மற்றும் காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள பாயுரு என்ற இடத்தில் அமைந்துள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்தே அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறிய நிலையில் அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளனர்.
மேலும் தேடுதல்களின் போது 90 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love