177
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இவை மனு தாக்கல் செய்துள்ளன.
விலங்குகள் நல வாரியம் என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு மத்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக தமிழக அரசின் சட்டத்தை எதிர்க்கிறது.
இந்தியப் பிரதமர் மோடியே தமிழர் கலாசாரத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அறிவித்துவிட்ட நிலையில்,, அரசின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு தமிழக விருப்பத்திற்கு மாறாக முறையீடு செய்துள்ளமை கவனிக்கத்தக்கது.
Spread the love