இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் பனிச்சரிவு: இந்திய இராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 பேர் பலி


காஷ்மீரின் பந்திபோரா, கந்தர்பால் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இராணுவ அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் குறிப்பிடுகையில் கந்தர்பால் மாவட்டத்திலுள்ள சோனாமார்க் பகுதியில் இன்றைய தினம், பனிச்சரிவில் சிக்கி இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக கூறினார்.

சோனாமார்க்கிலுள்ள இராணுவ முகாமில் 5 அடி உயரமுள்ள பெரிய பனிப் பாறைகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் அதில் அந்த இராணுவ முகாம் புதையுண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பந்திபோரா மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பந்திபோரா  மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கடுமையான பனிபொழிவு நிலவுகிறது. இதனால் வடக்கு மாற்று தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.