163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடி குறித்த கோப் குழு அறிக்கை, சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றின் ஒப்புதலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கோப் குழுவின் அறிக்கை, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கோப் குழு அறிக்கைககள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் வழங்கப்படவில்லை எனவும், முன்னுதாரணமாக இந்த அறிக்கையை சமர்ப்பித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love