173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளதாக கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கூடிய கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தொடர்பான கோப் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹெஜிங் கொடுக்கல் வாங்கல்கள் மூலம் 14 ஆயிரத்து 62 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love